தமிழ் தட்சிணை யின் அர்த்தம்

தட்சிணை

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில் குருக்களுக்கு அல்லது கல்வி கற்பித்த குரு முதலியோருக்கு) காணிக்கையாக அளிக்கும் பணம் அல்லது பொருள்.

    ‘குருக்கள் நீட்டிய அர்ச்சனைத் தட்டில் ஒரு ரூபாய் தட்சிணை போட்டான்’
    ‘சிலம்பம் கற்றுத் தந்த ஆசானுக்குத் தட்சிணை அளித்து வணங்கினான்’
    ‘புது வீட்டுக்குக் கடைக்கால் பூஜை போட்ட கொத்தனாருக்கு அவர் தட்சிணை கொடுத்தார்’