தமிழ் தட்டி யின் அர்த்தம்

தட்டி

பெயர்ச்சொல்

 • 1

  ஓலை, பிளந்த மூங்கில் துண்டு, பிரம்பு போன்றவற்றால் பின்னப்பட்டு அல்லது ஒன்றாகக் கட்டப்பட்டுக் கதவாகவோ மறைப்பாகவோ பயன்படும் அமைப்பு.

  ‘வேலித் தட்டியைத் தள்ளிக்கொண்டு அவன் உள்ளே வந்தான்’
  ‘நடுவில் தட்டிகள் வைத்து அறையைப் பிரித்திருந்தார்கள்’

 • 2

  (வரவேற்பு வாசகம், விளம்பரம் முதலியவை எழுதிப் பொது இடங்களில் வைக்க அல்லது தூக்கிச்செல்லப் பயன்படும்) மூங்கில் போன்றவற்றால் செய்யப்படும், சதுர அல்லது செவ்வக வடிவத்தில் இருக்கும் தட்டையான அமைப்பு.

  ‘தலைவர் வருவதை ஒட்டிச் சாலை நெடுக வரவேற்புத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன’
  ‘கடையின் முன் விளம்பரத் தட்டி வைக்க அனுமதி கேட்டார்கள்’