தமிழ் தட்டிக்கேள் யின் அர்த்தம்

தட்டிக்கேள்

வினைச்சொல்-கேட்க, -கேட்டு

  • 1

    (வரன்முறையை அல்லது வரம்பை மீறிய செயல்பாடு, நடத்தை, போக்கு போன்றவற்றை) நியாயமற்றது எனச் சுட்டிக்காட்டுதல் அல்லது கண்டித்தல்.

    ‘தட்டிக்கேட்க ஆள் இல்லாததால் அவன் கெட்டு அலைகிறான்’
    ‘அரசின் தவறான போக்கைத் தட்டிக்கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு’
    ‘இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா?’