தமிழ் தட்டி எழுப்பு யின் அர்த்தம்

தட்டி எழுப்பு

வினைச்சொல்எழுப்ப, எழுப்பி

 • 1

  (பேச்சு, எழுத்து, செயல் மூலம் உணர்வு, சிந்தனை முதலியவற்றை) தூண்டி எழுச்சிபெறச் செய்தல்.

  ‘அவருடைய ஆவேசமான பேச்சு உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதாக இருந்தது’
  ‘பாரதியாரின் கவிதைகள் மக்களைத் தட்டி எழுப்பின’
  ‘ஆசிரியரின் அறிவுரை அவனுள் உறங்கிக்கிடந்த திறமைகளைத் தட்டி எழுப்பியது’
  ‘உள்ளத்தை ஊடுருவி உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் இசை’