தமிழ் தட்டுத்தடங்கல் யின் அர்த்தம்

தட்டுத்தடங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைச் செய்வதில் ஏற்படும்) தடை; குறுக்கீடு.

    ‘கல்யாணம் தட்டுத்தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறேன்’
    ‘வியாபாரம் என்றால் தட்டுத்தடங்கல் இருக்கத்தான் செய்யும்’
    ‘அவனால் ஆங்கிலத்தில் தட்டுத்தடங்கல் இல்லாமல் பேச முடியாது’