தமிழ் தட்டுப்படு யின் அர்த்தம்

தட்டுப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (புலனில் அல்லது புலனுக்கு உணரக்கூடியதாக) தெரிதல்.

  ‘பையைத் துழாவிக் கையில் தட்டுப்பட்ட சில்லறையை எடுத்தேன்’
  ‘இந்த விஷயம் எனக்குத் தட்டுப்படவே இல்லையே’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்று மற்றொன்றின் மேல்) படுதல்.

  ‘கை தட்டுப்பட்டுப் போத்தல் கீழே விழுந்தது’
  ‘கால் தட்டுப்பட்டுக் கீழே விழுந்தான்’
  ‘தெரியாமல் உங்கள் மேல் என் கை தட்டுப்பட்டுவிட்டது’