தமிழ் தடம்புரள் யின் அர்த்தம்

தடம்புரள்

வினைச்சொல்-புரள, -புரண்டு

 • 1

  (புகைவண்டி) இருப்புப்பாதையிலிருந்து விலகுதல்.

 • 2

  (சிந்தனை, செயல், பேச்சு போன்றவை) உரிய போக்கிலிருந்து மாறுதல்.

  ‘இவ்வளவு நேரம் ஒழுங்காகத்தானே பேசிக்கொண்டிருந்தாய்? திடீரென்று பேச்சு ஏன் தடம்புரள்கிறது?’
  ‘அவளைச் சந்தித்த பிறகு என் வாழ்க்கையே தடம்புரண்டுவிட்டது’
  ‘அரசின் நடவடிக்கைகளால் பொருளாதாரம் தடம் புரண்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்’