தமிழ் தடயம் யின் அர்த்தம்

தடயம்

பெயர்ச்சொல்

 • 1

  நடந்து முடிந்த நிகழ்வை அறிந்துகொள்ளும் வகையில் எஞ்சியிருப்பது அல்லது கிடைப்பது.

  ‘வேலி விழுந்திருப்பதும் பாத்திகள் அழிக்கப்பட்டிருப்பதும் யானை இங்கே வந்து போனதற்கான தடயங்கள்’

 • 2

  குற்றம் செய்தவரைக் கண்டுபிடிக்க உதவுகிற பொருள், தகவல் முதலிய ஆதாரம்.

  ‘அவருடைய குற்றத்தை நிரூபிக்கத் தக்க தடயங்கள் கிடைக்காததால் விசாரணை கைவிடப்பட்டது’
  ‘குற்றவாளி ஒரு தடயத்தையும் விட்டுச் செல்லவில்லை’