தமிழ் தடய அறிவியல் யின் அர்த்தம்

தடய அறிவியல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து அந்தக் குற்றத்தைத் துப்புத்துலக்க உதவும் அறிவியல் துறை.

    ‘கொலை நடந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தலைமுடி தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’
    ‘தடய அறிவியலில் மண்டை ஓடு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார்’