தமிழ் தடவு யின் அர்த்தம்

தடவு

வினைச்சொல்தடவ, தடவி

 • 1

  (உடம்பின்) ஒரு பகுதியின் மீது கையை மென்மையாக நகர்த்துதல்.

  ‘மகளின் கன்னத்தைத் தடவி முத்தமிட்டாள்’
  ‘படுத்திருந்த அப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கையைத் தடவிக்கொடுத்தான்’

 • 2

  (கை, கால் முதலியவற்றால்) தொட்டுப் பார்த்தல்.

  ‘இருளில் காலால் தடவிப்பார்த்து அடி எடுத்து வைத்தார்’

 • 3

  (ஒரு பரப்பில் எண்ணெய் முதலியவை) பூசுதல்; தேய்த்தல்.

  ‘காயம் பட்ட இடத்தில் களிம்பு தடவினான்’
  ‘பசை தடவிப் படத்தை ஒட்டினான்’
  ‘மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிகை’