தமிழ் தடவை யின் அர்த்தம்

தடவை

பெயர்ச்சொல்

 • 1

  நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலைக் குறித்த எண்ணிக்கை; முறை.

  ‘இந்த ஊருக்கு நான் பல தடவை வந்திருக்கிறேன்’
  ‘வெளியே வந்ததும் ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு தவணை.

  ‘வங்கி தரும் கடனை எத்தனை தடவையில் கட்டி முடிக்க வேண்டும்?’
  ‘இரண்டு தடவையில் உன் பணத்தைத் தந்துவிடுவேன்’