தடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தடி1தடி2தடி3

தடி1

வினைச்சொல்தடிக்க, தடித்து

 • 1

  (அடிபடுதல், பூச்சிக் கடி முதலியவற்றால் உடலின் மேல் பரப்பு) சிறிய அளவில் வீங்குதல்; புடைத்துக் காணப்படுதல்.

  ‘குழந்தை கீழே விழுந்ததில் அடிபட்டு உதடு தடித்திருக்கிறது’
  ‘என்ன கடித்ததோ தெரியவில்லை; உடம்பு முழுவதும் திட்டுத்திட்டாகத் தடித்துவிட்டது’

 • 2

  (உடல்) சற்றுப் பெருத்தல்.

  ‘கல்யாணத்திற்குப் பிறகு உன் நண்பர் தடித்துவிட்டார்’

 • 3

  (பேச்சு) வரம்பு மீறுதல்.

  ‘சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு தடித்துச் சண்டையில் முடிந்தது’

தடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தடி1தடி2தடி3

தடி2

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவரின் உடல், ஒரு பொருள் முதலியவற்றின் அளவுகுறித்து வரும்போது) பருமன்.

  ‘ஆள் எப்படித் தடியாக இருக்கிறார் பார்!’
  ‘இவ்வளவு தடியான ஆணி தேவையில்லை’
  ‘தடிதடியான புத்தகங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து வந்துகொண்டிருந்தார்’

தடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தடி1தடி2தடி3

தடி3

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (அடிக்கவோ தாக்கவோ பயன்படுத்தும்) உருண்டையாகவும் கனமாகவும் இருக்கும் கழி; (இரும்பு என்பதோடு இணைந்து) நீண்ட துண்டு.

  ‘பாம்பை அடிக்கத் தடியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தான்’
  ‘கையில் கத்தி, இரும்புத் தடி முதலியவற்றுடன் வந்து தாக்கினார்கள்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு குச்சி.

  ‘கண்டபடி தடியெடுத்து விளையாடாதே, கண்ணில் குத்திவிடும்’
  ‘பிள்ளையைத் தடியால் அடிக்காதே’