தமிழ் தடிப்பு யின் அர்த்தம்

தடிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பூச்சிக் கடி முதலியவற்றால் ஏற்படும்) திட்டுதிட்டான வீக்கம்.

 • 2

  பேச்சு வழக்கு (ஒரு பொருள், வடிவம் ஆகியவற்றின்) பருமன்; கனம்.

  ‘கோட்டைக் கொஞ்சம் தடிப்பாகப் போடு’
  ‘தடிப்பான துணியில் உறை தைத்தால் சீக்கிரம் கிழியாது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (திரவத்தின் அடர்த்தியைக் குறிக்கும்போது) குழகுழப்பான தன்மை.

  ‘ஆட்டுப்பால் தடிப்பாக இருக் கும்’
  ‘தடிப்பான பாலைத்தான் நாங்கள் விரும்புகிறோம்’

தமிழ் தடிப்பு யின் அர்த்தம்

தடிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு திமிர்; அகங்காரம்.

  ‘அந்தத் தடிப்புப் பிடித்த குடும்பத்தில் நான் பெண்ணெடுக்கத் தயாராகயில்லை’
  ‘தடிப்புப் பிடித்த பயல்’