தமிழ் தடு யின் அர்த்தம்

தடு

வினைச்சொல்தடுக்க, தடுத்து

 • 1

  (ஒரு செயலை) நிகழாமல் இருக்கச் செய்தல்; (ஒன்றை) தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்.

  ‘சண்டைக்குக் கிளம்பியவனைத் தடுத்துச் சமாதானப்படுத்தினேன்’
  ‘கள்ளச் சாராயம் காய்ச்சுவதைச் சட்டத்தால் மட்டும் தடுத்துவிட முடியாது’

 • 2

  (ஓடும் வாகனம், ஓடி வரும் ஆற்று நீர் முதலியவற்றை) மேற்செல்லாதபடி செய்தல்.

  ‘சோதனை போடுவதற்காக லாரியைத் தடுத்து நிறுத்தினார்’
  ‘ஆற்று நீரைத் தடுத்து நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது’

 • 3

  (அடி விழாமல், ஆபத்து ஏற்படாமல்) காத்தல்.

  ‘இரு கைகளையும் தலை மேல் வைத்துத் தன் மீது விழுந்த அடியைத் தடுத்துக்கொண்டான்’
  ‘அணு உலைகளால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கப் போதிய முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’

 • 4

  (அறையைச் சிறு பகுதிகளாக) பிரித்தல்.

  ‘மாடி அறையை இரண்டாகத் தடுத்து வாடகைக்கு விடலாம்’