தமிழ் தடுக்கு யின் அர்த்தம்

தடுக்கு

வினைச்சொல்தடுக்க, தடுக்கி

 • 1

  (கால்) இடறுதல்; (ஏதேனும் ஒன்று காலை) இடறுதல்.

  ‘கால் தடுக்கிக் கீழே விழுந்தான்’
  ‘வேட்டி காலைத் தடுக்காமல் இருக்கச் சற்று உயர்த்திக் கட்டிக்கொண்டார்’

தமிழ் தடுக்கு யின் அர்த்தம்

தடுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட) சதுர அல்லது செவ்வக வடிவச் சிறிய பாய்.

  ‘தடுக்கை எடுத்துப் போட்டுச் சாப்பிட உட்கார்ந்தான்’

 • 2

  வட்டார வழக்கு தட்டி.

  ‘அறையைத் தடுக்கு வைத்து இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்’