தமிழ் தடுத்துவை யின் அர்த்தம்

தடுத்துவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரைப் போகவிடாமல்) தடுத்து நிறுத்துதல்; நிறுத்திவைத்தல்.

    ‘அவன் அவசரமாக எங்கேயோ கிளம்பிக்கொண்டிருக்கிறான்; அவனைத் தடுத்துவைக்காதே’
    ‘பாட்டி உன்னைத் தடுத்துவைக்கப்போகிறாள். சொல்லிவிட்டுச் சீக்கிரம் கிளம்பி வந்துவிடு’
    ‘ராணுவத்தினர் அவனைத் தடுத்துவைத்துள்ளனர்’