தமிழ் தடுப்பு யின் அர்த்தம்

தடுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  பாதுகாப்புக்காக ஓர் இடத்தைச் சுற்றிலும் அல்லது அந்த இடத்துக்கு முன்னால் அமைக்கப்படுவது.

  ‘வேலித் தடுப்புகளின் உள்ளே வீடு இருந்தது’

 • 2

  (நோய் முதலியவற்றை) தடுக்கும் மருந்து அல்லது வழிமுறை.

  ‘வெள்ளத்தை முன்னிட்டு நோய்த் தடுப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது’
  ‘மாசுத் தடுப்பு நடவடிக்கைகளைத் தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டும்’

 • 3

  சட்ட விரோதச் செயல்களை நடக்க விடாமல் (காவல்துறையினர்) மேற்கொள்ளும் நடவடிக்கை.

  ‘கடத்தல் தடுப்புப் பிரிவு’
  ‘காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கை கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவியது’