தமிழ் தடுமாற்றம் யின் அர்த்தம்

தடுமாற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  (நடத்தல், நிற்றல் போன்ற செயல்களைச் செய்யும்போது) சீராக இல்லாமல் முன்னும்பின்னுமோ பக்கவாட்டிலோ சாய்தல்.

  ‘நடையில் இருக்கும் தடுமாற்றத்தைப் பார்த்தால் அவன் குடித்திருப்பான்போல் தெரிகிறது’

 • 2

  (பேசும்போது) குளறுதல்; திணறல்.

  ‘நாலடிச் செய்யுளை ஒப்பிப்பதில்கூடத் தடுமாற்றமா?’

 • 3

  (சிந்தனையில், போக்கில்) நிலையற்ற தன்மை; குழப்பம்.

  ‘என் மனத்தில் தடுமாற்றம் எதுவும் இல்லை; நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்’