தமிழ் தடுமாறு யின் அர்த்தம்

தடுமாறு

வினைச்சொல்தடுமாற, தடுமாறி

 • 1

  (இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்) முன்னும்பின்னுமோ பக்கவாட்டிலோ சாய்தல்.

  ‘அதிகமாகக் குடித்துவிட்டுப் போதையில் தடுமாறினான்’
  ‘மேகக் கூட்டத்திற்குள் புகுந்த விமானம் தடுமாறியது’
  உரு வழக்கு ‘போட்டியின் ஒரு கட்டத்தில் வரிசையாக முக்கிய ஆட்டக்காரர்களை இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்தது’

 • 2

  (பேச்சு) சீரற்று வெளிப்படுதல்; (பேச முடியாமல்) குளறுதல்; திணறுதல்.

  ‘ஜுரம் மிக அதிகமாகிவிட்டதால் வார்த்தைகள் தடுமாறின’
  ‘நடிகர் வசனம் பேச முடியாமல் தடுமாறினார்’

 • 3

  (குறிப்பிட்ட நிலையில் முடிவெடுக்க அல்லது செயல்பட முடியாமல்) திணறுதல்.

  ‘பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான்’