தமிழ் தடை யின் அர்த்தம்

தடை

பெயர்ச்சொல்

 • 1

  தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.

  ‘விபத்தினால் வழக்கமான போக்குவரத்திற்குத் தடை ஏற்பட்டிருக்கிறது’

 • 2

  ஒன்று தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்; ஆட்சேபணை.

  ‘நீ மேற்படிப்புப் படிப்பதைப் பற்றி எனக்குத் தடை எதுவும் இல்லை’

 • 3

  சட்டபூர்வமாகத் தடுத்தல்.

  ‘சில மருந்துகளின் விற்பனைமீது அரசு தடை விதிக்கலாமா என்று ஆலோசித்துவருகிறது’
  ‘காவல்துறையினர் விதித்த தடையை மீறிய கிளர்ச்சியாளர்கள் கைது’