தமிழ் தடைபடு யின் அர்த்தம்

தடைபடு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒரு செயல் நிகழாதவாறு) இடையூறு ஏற்படுதல்.

    ‘என் மகனின் திருமணம் ஒரு வருடமாகத் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது’

  • 2

    (ஒன்றின் தொடர்ச்சியான இயக்கம்) நின்றுபோதல்.

    ‘இரத்த ஓட்டம் தடைபடும்போது இருதயம் பாதிப்படைகிறது’
    ‘திடீரென்று மின்சாரம் தடைபட்டதால் வீடு இருளில் மூழ்கியது’
    ‘அணையிலிருந்து வரும் நீர் வரத்து தடைபட்டால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்’