தமிழ் தண்டனை யின் அர்த்தம்

தண்டனை

பெயர்ச்சொல்

 • 1

  குற்றம்புரிந்தவர் அபராதம் கட்டுதல், சிறைவாசம், மரணம் போன்றவற்றை அனுபவிக்க வேண்டியதாக நீதிமன்றம் விதிப்பது.

  ‘இந்த வழக்கில் குற்றவாளி தண்டனை பெறுவது உறுதி’
  ‘அவர் தன் தண்டனைக் காலம் முழுவதையும் சென்னை மத்தியச் சிறையில் கழித்தார்’

 • 2

  செய்த தவறுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்யவைப்பது.

  ‘என்னோடு பேசாமல் இருப்பதுதான் நீ எனக்குத் தரும் தண்டனையா?’
  ‘இளம் வயதில் ஒழுங்காகப் படிக்காததற்கான தண்டனையை இப்போது அனுபவிக்கிறேன்’