தமிழ் தீண்டாமை யின் அர்த்தம்

தீண்டாமை

பெயர்ச்சொல்

  • 1

    சாதி அமைப்பில் சில சாதியினர் தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்னும் சமூக விரோதப் போக்கு.

    ‘தீண்டாமை சட்டப்படி குற்றம்’

  • 2

    பெருகிவரும் வழக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயாளிகள் போன்றோரைக் குடும்பத்திலிருந்தோ பள்ளியிலிருந்தோ அலுவலகத்திலிருந்தோ தள்ளிவைத்தல், சிகிச்சை அளிக்க மறுத்தல் போன்ற செயல்பாடு.