தமிழ் தீண்டு யின் அர்த்தம்

தீண்டு

வினைச்சொல்தீண்ட, தீண்டி

 • 1

  (பாம்பு, விஷப் பூச்சி போன்றவை) கடித்தல்.

  ‘கருநாகம் தீண்டி இறந்துபோனார்’
  ‘புதர்ப் பக்கம் போகாதே. ஏதாவது தீண்டிவிடப்போகிறது’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறையில்) தொடுதல்.

  ‘இந்தச் செடியை எந்த விலங்கும் தீண்டுவதில்லை’
  ‘தன் மனைவியைத் தவிர அவர் வேறு பெண்ணைத் தீண்டியதில்லை’

தமிழ் தண்டு யின் அர்த்தம்

தண்டு

பெயர்ச்சொல்

 • 1

  வேருக்கு மேலாக பூ, இலை, காய் ஆகியவற்றைத் தாங்கி அமைந்திருக்கும், தாவரத்தின் நீண்ட பாகம்.

  ‘நீர்த் தாவரங்களில் தண்டு நீருக்கு உள்ளே இருக்கும்’

 • 2

  (குத்துவிளக்கில் திரி இடும் மேல்பகுதிக்கும் தரையில் படும் அடிப்பகுதிக்கும் இடையில் இருக்கும்) குழல் போன்ற நீண்ட பகுதி.

  ‘தண்டைப் பிடித்து விளக்கைத் தூக்கு’

தமிழ் தண்டு யின் அர்த்தம்

தண்டு

பெயர்ச்சொல்