தணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தணி1தணி2

தணி1

வினைச்சொல்தணிய, தணிந்து, தணிக்க, தணித்து

 • 1

  (வெப்பம், பசி, கோபம் முதலியவை) குறைதல்; தாழ்தல்.

  ‘வெயில் தணிந்த பிறகு போகலாம்’
  ‘மோர் குடித்தால் தாகம் தணியும்’
  ‘ஜுரம் இன்னும் தணியவில்லை’

 • 2

  (குரல்) அமுங்குதல்; ஒடுங்குதல்.

  ‘நான் வருவதைப் பார்த்ததும் அவன் குரல் தணிந்தது’
  ‘அவர்கள் இருவரும் தணிந்த குரலில் ஏதோ பேசிக்கொண்டனர்’

 • 3

  (எதிர்ப்புக் காட்டாமல்) பணிதல்.

  ‘நான் குரலை உயர்த்தியதும் அவன் தணிந்துவிட்டான்’
  ‘அவர்தான் கோபமாகப் பேசுகிறார் என்றால், நீயாவது கொஞ்சம் தணிந்துபோகக் கூடாதா?’
  ‘அவன் என் அண்ணன்தான்; அதற்காக நான் ஏன் தணிந்து போக வேண்டும்?’

தணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தணி1தணி2

தணி2

வினைச்சொல்தணிய, தணிந்து, தணிக்க, தணித்து

 • 1

  (வெப்பம், பசி, கோபம் முதலியவற்றை) குறைத்தல்.

  ‘தண்ணீரைக் குடித்துப் பசியைத் தணிக்க முடியுமா?’
  ‘நகரத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்’

 • 2

  (குரலை) தாழ்த்துதல்.

  ‘அவர்கள் குரலைத் தணித்துக்கொண்டு ஏதோ ரகசியம் பேசினார்கள்’

 • 3

  (விளக்கின் சுடரை) சிறிதாக்குதல்; குறைத்தல்.

  ‘விளக்கைத் தணித்துவிட்டுப் படுத்தாள்’