தமிழ் தணிக்கை யின் அர்த்தம்

தணிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  (அரசாங்கம் ஒரு குழுவின் மூலமாகத் திரைப்படம், பத்திரிகை போன்றவற்றிலிருந்து) நாகரிகமற்றது அல்லது தேச நலன்களுக்கு எதிரானது என்று சட்டம் விதித்துள்ள வரம்புகளை மீறும் வகையில் உள்ள பகுதிகளை நீக்குதல்.

  ‘இந்தியாவில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதும் பல பத்திரிகைகள் தணிக்கைக்கு உள்ளாயின’
  ‘அரசியல் காரணங்களுக்காகத் தன் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என்று இயக்குநர் குற்றம்சாட்டினார்’

 • 2

  (ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின்) வரவுசெலவுக் கணக்குகள் ஒழுங்காகப் பராமரிக்கப்படுகின்றனவா என்று அதிகாரபூர்வமாக ஆய்வுசெய்தல்.

  ‘அந்த நிறுவனத்தில் நிறைய ஊழல்கள் நடைபெற்றிருப்பது தணிக்கையின்போது தெரியவந்தது’

 • 3

  (ஒரு துறையின் அன்றாடச் செயல்பாடுகளைச் சரிபார்ப்பதற்காகச் செய்யப்படும்) ஆய்வு.

  ‘வனத்துறை அதிகாரி தணிக்கைக்காக நாளை வருகிறார்’