தமிழ் தண்டச்சோறு யின் அர்த்தம்

தண்டச்சோறு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எந்த வருமானமும் இல்லாமல்) மற்றவருடைய தயவால் கிடைக்கும் சாப்பாடு.

    ‘இன்னும் எவ்வளவு நாள்தான் மற்றவர் வீட்டில் தண்டச்சோறு சாப்பிடுவாய்? உனக்கென்று ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டாமா?’

  • 2

    பேச்சு வழக்கு (உழைத்துச் சாப்பிடாமல்) மற்றவருடைய தயவில் வாழும் நபரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

    ‘அந்தத் தண்டச்சோற்றைக் கடைக்கு அனுப்பிப் பழம் வாங்கி வரச்சொல்’