தமிழ் தத்தளி யின் அர்த்தம்

தத்தளி

வினைச்சொல்தத்தளிக்க, தத்தளித்து

 • 1

  (ஓர் ஆபத்தான அல்லது நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி அல்லது நிலைகுலைந்து) திண்டாடுதல்; அலைக்கழிதல்; தவித்தல்.

  ‘நீரில் தத்தளித்து மூழ்க இருந்தவரை மீனவர்கள் காப்பாற்றினார்கள்’
  ‘புயலில் சிக்கிக் கப்பல் தத்தளித்தது’
  ‘பூகம்பத்தினால் ஆயிரக் கணக்கானோர் வீடு இழந்து தத்தளிக்கின்றனர்’
  ‘அவர் ஏகப்பட்ட கடன்களை வாங்கி மகளுக்குக் கல்யாணம் செய்துவிட்டு இப்போது தத்தளிக்கிறார்’