தமிழ் தத்து யின் அர்த்தம்

தத்து

வினைச்சொல்தத்த, தத்தி

 • 1

  (பறவைகள், சிறு பிராணிகள்) கால்களை ஊன்றியவாறு தாவுதல்.

  ‘தத்திச் செல்லும் தவளையை விழுங்கப் பாம்பு காத்திருந்தது’

 • 2

  (குழந்தை) தட்டுத்தடுமாறி அடி எடுத்து வைத்தல்.

  ‘குழந்தை இப்போதுதான் தத்தித்தத்தி நடக்கிறது’

தமிழ் தத்து யின் அர்த்தம்

தத்து

பெயர்ச்சொல்

 • 1

  சுவீகாரம்.

  ‘தத்துப் பிள்ளை’

தமிழ் தத்து யின் அர்த்தம்

தத்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கண்டம்; ஆபத்து.

  ‘பதினாறு வயதில் உன் மகனுக்கு ஒரு தத்து உள்ளது’
  ‘யார் செய்த புண்ணியமோ அவன் பெரிய தத்திலிருந்து தப்பிவிட்டான்’