தமிழ் ததும்பு யின் அர்த்தம்

ததும்பு

வினைச்சொல்ததும்ப, ததும்பி

 • 1

  (பாத்திரத்தில் உள்ள திரவம் அல்லது கண்களில் கண்ணீர்) வழிந்துவிடும் நிலையில் இருத்தல்.

  ‘தன் தந்தை பட்ட துன்பங்களைச் சொன்னபோது அவன் கண்ணில் நீர் ததும்பியது’

 • 2

  (ஒருவருடைய பேச்சு, பார்வை ஆகியவற்றில் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சி) மிகுந்து வெளிப்படுதல்.

  ‘அன்பு ததும்பும் பார்வை’
  ‘சோக ரசம் ததும்பும் பாடல்’