தமிழ் தந்தி யின் அர்த்தம்

தந்தி

பெயர்ச்சொல்

 • 1

  (வீணை, வயலின் முதலிய இசைக் கருவிகளில்) நாதத்தை எழுப்புவதற்காக நீள வாக்கில் கட்டப்பட்டிருக்கும் வலுவான மெல்லிய கம்பி.

  ‘வீணையின் தந்தி அறுந்துவிட்டது’
  ‘தந்தி வாத்தியங்கள்’

தமிழ் தந்தி யின் அர்த்தம்

தந்தி

பெயர்ச்சொல்

 • 1

  (அஞ்சல் அலுவலகத்தால் சேவையாக வழங்கப்படும்) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றி மிக விரைவாக அனுப்பப்படும் செய்தி.

  ‘உடனே புறப்பட்டு வருமாறு ஊரிலிருந்து தந்தி வந்தது’
  ‘வாழ்த்துத் தந்தி கிடைத்தது’