தமிழ் தந்தியடி யின் அர்த்தம்

தந்தியடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

 • 1

  செய்தி விரைவாகக் குறிப்பிட்ட முகவரிக்குப் போவதற்காக இயந்திரப் பொறியில் குறியீட்டு முறையில் செய்தியை விரல்களால் கடகடவென்று தட்டி அனுப்புதல்.

 • 2

  (ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக) தந்தி வழியாகச் செய்தி அனுப்புதல்.

  ‘அப்பாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது என்று தம்பி தந்தியடித்திருக்கிறான்’

 • 3

  (ஒருவரின் பற்கள், உதடுகள், கை, கால் ஆகியவை பயத்தால் அல்லது குளிரால்) கடகடவென்று ஆடுதல்; நடுங்குதல்.

  ‘காவல் நிலையத்திற்கு வரச்சொன்னார்கள் என்று கேட்டதுமே அவனுக்குக் கைகால்கள் தந்தியடிக்க ஆரம்பித்துவிட்டன’
  ‘குளிரில் பற்கள் தந்தியடித்தன’