பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு உணவு.
‘வீட்டுக்குள் போய் ஏதேனும் தீன் கிடந்தால் தின்றுவிட்டு, கடற்கரைப் பக்கமாகப் போய்ச் சுற்றித் திரிவான்’
பெயர்ச்சொல்
- 1
‘தான்’ என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் வடிவம்.
‘அவன் தன் நண்பனை மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்’‘பணம் பத்திரமாக இருக்கிறதா என்று தன் பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்’‘தன்னால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு’‘தனக்கு என்று ஒரு வீடு கட்டிக்கொள்ள ஆசைப்பட்டான்’
இடைச்சொல்
உயர் வழக்கு- 1
உயர் வழக்கு சுட்டுப்பெயருடன் இணைந்து ஆறாம் வேற்றுமைப் பொருளில் வரும் இடைச்சொல்.
‘உந்தன் மன உறுதி’‘அவர்தன் பெருமை’‘எந்தன் நெஞ்சம்’