தமிழ் தன்னடக்கம் யின் அர்த்தம்

தன்னடக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    தற்புகழ்ச்சி இல்லாமலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமலும் இருக்கும் தன்மை.

    ‘இவ்வளவு பெரிய பதவியிலிருந்தும் எவ்வளவு தன்னடக்கத்துடன் பேசுகிறார்!’
    ‘அவர் சாதனையாளராக இருக்கலாம். அதற்காகத் தன்னடக்கம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டுமா?’