தமிழ் தன்னிச்சை யின் அர்த்தம்

தன்னிச்சை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (அசைவு, இயக்கம் முதலியவை பிறவற்றின்) கட்டுப்பாடோ விருப்பமோ இன்றித் தானாக நிகழ்வது.

  ‘மூளை தன்னிச்சையாக இயங்குகிறது’
  ‘இருதயத்திலிருக்கும் தசைகள் தன்னிச்சையாக சுருங்கி விரிகின்றன’

 • 2

  ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அல்லது தரப்புகள் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தில் மற்றவரின் ஒப்புதல் இல்லாமல் ஒருவர் தானே முடிவெடுக்கும் போக்கு.

  ‘அதிகாரிகளைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அவர் எடுத்த முடிவு இது’
  ‘செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமல் நான் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது’

 • 3

  சுதந்திரமாகச் செயல்படும் தன்மை.

  ‘நான் நினைத்த மாத்திரத்தில் தன்னிச்சையாக எங்கும் கிளம்பிவிட முடியாது’
  ‘தன்னிச்சையான அமைப்பு’

 • 4

  (ஒன்றை) எந்தக் கட்டாயமும் இன்றி முழு விருப்பத்தோடு செய்யும் தன்மை.

  ‘20 ஆண்டுகள் அரசுப்பணி செய்தவர்கள் தன்னிச்சையாக ஓய்வு பெறலாம்’
  ‘நாங்கள் தன்னிச்சையாகப் போரை நிறுத்த முடியாது’
  ‘மருத்துவரின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக நீங்கள் எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது’