தமிழ் தன்னிறைவு யின் அர்த்தம்

தன்னிறைவு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நாட்டின் தேவைகள் அந்நாட்டின் பொருள் உற்பத்தியாலேயே நிறைவு பெறும் நிலை.

  ‘நம் நாடு விவசாயத் துறையில் தன்னிறைவு அடைந்துவிட்டது என்பது ஒரு சாதனைதான்’
  ‘எல்லாத் துறைகளிலும் நாட்டைத் தன்னிறைவு பெறச் செய்வதே அரசின் நோக்கம்’

 • 2

  (ஒருவர் தன் ஆசை, தேவை முதலியவற்றில்) கிடைத்தது போதும் என்ற வகையில் அடையும் திருப்தி.

  ‘எவ்வளவு பணம் கிடைத்தாலும் அவர் தன்னிறைவு அடைவதே இல்லை’