தமிழ் தன்மை யின் அர்த்தம்

தன்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இப்படிப்பட்டது அல்லது இப்படிப்பட்டவர் என்பதை அறிவதற்கான அம்சம்.

  ‘இலக்கியத் தன்மை நிறைந்த நூல்’
  ‘மனிதத் தன்மையே இல்லாதவன்’

 • 2

  (ஒன்று அல்லது ஒருவர்) குறிப்பிட்ட கூறுகளை இயற்கையாகக் கொண்டிருக்கும் நிலை.

  ‘மண்ணின் தன்மையைப் பொறுத்தே பயிர்கள் நன்றாக வளர்கின்றன’
  ‘நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்து சாப்பிட வேண்டும்’
  ‘அமிலத் தன்மை உடைய உணவுப் பொருள்’

 • 3

  பேச்சு வழக்கு (பேச்சு, பழக்கம், நடவடிக்கை போன்றவற்றில் ஒருவர் கடைப்பிடிக்கும்) பொறுமையும் அமைதியும் கலந்த நிதானமான போக்கு.

  ‘அவர் எல்லோரிடமும் தன்மையாகப் பழகுவார்’
  ‘ரொம்பத் தன்மையான மனிதர்’

தமிழ் தன்மை யின் அர்த்தம்

தன்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகிய மூன்று இடங்களுள் பேசுபவரைக் குறிப்பது.