தனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தனி1தனி2தனி3தனி4

தீனி1

பெயர்ச்சொல்

 • 1

  (விலங்கு, கோழி முதலியவற்றுக்குப் போடும்) உணவு.

  ‘விலங்குகள் தீனியே காணாதது போல இளைத்துக் காணப்பட்டன’
  ‘மாட்டுக்குத் தீனி வைத்துவிட்டாயா?’

தனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தனி1தனி2தனி3தனி4

தனி2

வினைச்சொல்தனிக்க, தனித்து

 • 1

  (யாரோடும் அல்லது எதனோடும் சேராமல்) விலகுதல்; பிரிந்திருத்தல்.

  ‘கூட்டத்திலிருந்து தனித்துப் போய்விட்டான்’
  ‘நாட்டில் கல்வியறிவு வளரவில்லையென்றால் நாம் முன்னேற முடியாமல் தனித்துவிடுவோம்’

தனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தனி1தனி2தனி3தனி4

தனி3

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பொதுவானதோ வழக்கமானதோ அல்லாதது; அலாதி; அசாதாரணம்.

  ‘அம்மாவின் சமையலே தனி’
  ‘அருவியில் குளிப்பது தனி சுகம்’

 • 2

  எல்லோருக்கும் கிடைக்காதது; பிரத்தியேகம்.

  ‘இவருக்கு மட்டும் என்ன தனிச் சலுகை?’

 • 3

  பிரிக்கப்பட்டு அமைவது.

  ‘என் மகனுக்குத் தனி அறை’
  ‘தனி மாநிலம் கேட்டுப் போராட்டம்’
  ‘தனியான வீடு’

 • 4

  உடன் யாரும் இல்லாமல் இருப்பது.

  ‘அவர் தனியாக உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்’
  ‘இந்த விளையாட்டைத் தனியாக ஆட முடியாது’
  ‘ஏன் தனியாக ஒதுங்கி நிற்கிறீர்கள்?’
  ‘நான் தனி ஆள்; நீங்கள் மூன்று பேர் என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே!’
  ‘இந்த வயதிலும் பெரியவர் தனியாகப் பயணம் செய்கிறார்’

தனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தனி1தனி2தனி3தனி4

தனி4

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இசைத்துறை

தனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தனி1தனி2தனி3தனி4

தனி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தனித்தொகுதி என்பதன் சுருக்கப் பட்ட வடிவம்.