தமிழ் தனிப்படை யின் அர்த்தம்

தனிப்படை

பெயர்ச்சொல்

  • 1

    (எளிதில் துப்புக் காணமுடியாத) கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகக் காவல்துறையில் அமைக்கப்படும் சிறப்புப் படை.

    ‘வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கப் பத்து பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது’
    ‘சிறையிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’