தமிழ் தனியன் யின் அர்த்தம்

தனியன்

பெயர்ச்சொல்

 • 1

  (எவருடைய உறவும் இல்லாமல்) தனித்து விடப்பட்டவர்.

  ‘இந்தப் பரந்த உலகத்தில் யாரும் தனியன் இல்லை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு தனித்து வசிப்பவர்.

  ‘தாயைத் தனியனாக விட்டுவிட்டு எல்லோரும் வெளிநாடு சென்றுவிட்டார்கள்’
  ‘அவர் ஊரில் தனியனாகத்தான் இருக்கின்றார்’