தமிழ் தீனி போடு யின் அர்த்தம்

தீனி போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (விரும்பத் தகாத உணர்வு, நிலை போன்றவற்றுக்கு) ஊக்கமளித்தல்.

    ‘ரசிகர்களின் மலிவான ரசனைக்குத் தீனி போடும் படங்களும் வரத்தான் செய்கின்றன’
    ‘சாதிப் பிரச்சினைக்குத் தீனி போட்டுச் சில கட்சிகள் ஆதாயம் தேடப்பார்க்கின்றன’