தமிழ் தப்பிப்பிழை யின் அர்த்தம்

தப்பிப்பிழை

வினைச்சொல்-பிழைக்க, -பிழைத்து

  • 1

    (ஏற்கெனவே மோசமாக இருக்கும் நிலைமை மேலும் மோசமாவதற்குள்) மீண்டுவிடுதல்; தப்பித்தல்.

    ‘கொள்ளையர்களிடமிருந்து தப்பிப்பிழைத்தது அவன் செய்த புண்ணியம்’
    ‘இந்த முறையாவது மழை பெய்தால்தான் விவசாயம் ஏதோ தப்பிப்பிழைக்க முடியும்’
    ‘விபத்தில் அவர் தப்பிப்பிழைத்தது பெரிய அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்’