தமிழ் தபால் பெட்டி யின் அர்த்தம்

தபால் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (அஞ்சல் நிலையத்தாரால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்) பொதுமக்கள் கடிதத்தைப் போடுவதற்கு வசதியாக சிறு திறப்பை உடைய (பொதுவாகச் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட) பெட்டி.

  • 2

    ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு வரும் கடிதங்களுக்கு என அஞ்சலகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும், எண்ணுடன் கூடிய சிறு பெட்டி.