தமிழ் தீமை யின் அர்த்தம்

தீமை

பெயர்ச்சொல்

  • 1

    கேடு விளைவிப்பது; மோசமான விளைவை ஏற்படுத்துவது; தீங்கு.

    ‘நன்மை எது, தீமை எது என்று அறியாத சிறு பிள்ளை’
    ‘வரதட்சணை வாங்குதல் போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள்’
    ‘வாழ்க்கையில் அவன் செய்த நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம்’