தமிழ் தம்பி யின் அர்த்தம்

தம்பி

பெயர்ச்சொல்

 • 1

  உடன்பிறந்தவர்களில் அல்லது உறவுமுறையிலான சகோதரர்களில் தனக்கு இளையவன்; இளைய சகோதரன்.

  ‘இவன் என் சொந்தத் தம்பி’
  ‘அவர் தன் ஒன்றுவிட்ட தம்பி மகளைத் தத்தெடுத்துக்கொண்டார்’

 • 2

  தன்னைவிட வயதில் குறைந்தவனை அழைக்கும் சொல்.

  ‘தம்பி! இந்த ஊரில் பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறது?’
  ‘இந்தத் தம்பிதான் என்னை உன் வீட்டுக்கு அழைத்து வந்தது’