தமிழ் தீய யின் அர்த்தம்

தீய

பெயரடை

 • 1

  ஊறு விளைவிக்கக்கூடிய; கெடுதல் தரும்; கெட்ட.

  ‘இந்த மருந்தினால் ஏற்படும் நன்மையைக் காட்டிலும் தீய விளைவுகளே அதிகம்’
  ‘தீய நண்பர்கள்’
  ‘தீய எண்ணம்’

தமிழ் தீய் யின் அர்த்தம்

தீய்

வினைச்சொல்தீய, தீய்ந்து, தீய்க்க, தீய்த்து

 • 1

  (தீயினால் அல்லது அதிகப்படியான சூட்டினால்) எரிந்து போதல்; கருகுதல்.

  ‘விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தீய்ந்து, கருகிப்போன நிலையில் பல உடல்கள் மீட்கப்பட்டன’
  ‘கருவாடு தீய்ந்துபோய்விட்டது’
  ‘மோர்மிளகாயைத் தீயவிடாதே’

 • 2

  (அதிகச் சூட்டால் பாத்திரத்தின் அடிப்பகுதியில் இருப்பது) சுண்டி அல்லது கருகிப் படிதல்.

  ‘பால் தீய்ந்த வாடை அடிக்கிறதே!’

 • 3

  (பயிர்கள், தாவரங்கள் முதலியவை வறட்சியால், வெப்பத்தால்) வாடி வதங்குதல்; காய்தல்.

  ‘பயிர்கள் வறட்சியால் தீய்ந்துகிடந்தன’

தமிழ் தீய் யின் அர்த்தம்

தீய்

வினைச்சொல்தீய, தீய்ந்து, தீய்க்க, தீய்த்து

 • 1

  (தீயில் அல்லது அதிகச் சூட்டில்) கருக்குதல்.

  ‘கிழங்கை வாட்டிக் கொண்டுவா என்றால் தீய்த்துவிட்டாயே!’
  ‘மஞ்சளைத் தீய்த்துத் தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தாள்’