தமிழ் தயக்கம் யின் அர்த்தம்

தயக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும்) தடுமாற்றம்.

  ‘உண்மையை எப்படிச் சொல்வது என்ற தயக்கம் அவன் கண்களில் தெரிந்தது’
  ‘அவன் என்னிடம் தயக்கத்துடன்தான் பேசினான்’
  ‘இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது’

 • 2

  தாமதம்.

  ‘பிரச்சினையைத் தீர்ப்பதில் நிர்வாகம் ஏன் தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை’