தமிழ் தயங்கு யின் அர்த்தம்

தயங்கு

வினைச்சொல்தயங்க, தயங்கி

 • 1

  (செயல்பட அல்லது முடிவெடுக்க முடியாமல்) தடுமாறுதல்; குழம்புதல்.

  ‘விஷயத்தை மேலதிகாரியிடம் சொல்வதா வேண்டாமா என்று நீ தயங்குவது தெரிகிறது’
  ‘மிகவும் தயங்கிப் பணம் வேண்டும் என்று கேட்டார்’

 • 2

  (குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்ய) தாமதித்தல்.

  ‘தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நிர்வாகம் தயங்கக் கூடாது’
  ‘ஒரு முடிவெடுத்த பின் தயங்குவது என்பது அவரிடம் கிடையாது’