தமிழ் தயாரி யின் அர்த்தம்

தயாரி

வினைச்சொல்தயாரிக்க, தயாரித்து

 • 1

  (பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில்) உற்பத்தி செய்தல்; உருவாக்குதல்.

  ‘வாகனங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை’
  ‘காற்றாலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம்’
  ‘எங்கள் நிறுவனம் பல வகையான கைவினைப் பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது’

 • 2

  (உணவு) சமைத்தல்/(காப்பி முதலியவை) போடுதல்.

  ‘பல வித உணவுகள் நொடியில் தயாரிக்கப்பட்டுவிட்டன’
  ‘காப்பி தயாரித்துவிட்டேன்’

 • 3

  (கட்டுரை, திட்டம் போன்றவற்றை) எழுதி அல்லது வரைந்து உருவாக்குதல்.

  ‘ஒரு கட்டுரை தயாரித்துக்கொண்டிருக்கிறேன்’
  ‘தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’
  ‘புதிய கட்டடத்திற்கான வரைபடத்தை நீங்கள் தயாரித்துத் தர முடியுமா?’

 • 4

  (திரைப்படம், நாடகம் போன்றவற்றை உருவாக்கும்) நிர்வாகப் பொறுப்பை அல்லது நிதிச் செலவை ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘அவர் தயாரித்த திரைப்படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றன’
  ‘இந்த நாடகத்தைத் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கத் திட்டம் இருக்கிறது’