தமிழ் தயாரிப்பு யின் அர்த்தம்

தயாரிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (பொருளை) தயாரித்தல்.

  ‘அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் தயாரிப்புச் செலவு அதிகரித்துவிட்டது’

 • 2

  தயாரிக்கப் பட்ட பொருள்.

  ‘எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை நீங்கள் நம்பி வாங்கலாம்’

 • 3

  (திரைப்படம், நாடகம் போன்றவற்றை) உருவாக்கும் செயல்.

  ‘இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பில் உதவிய அனைவருக்கும் நன்றி’